Skip to main content

தமிழகத்திற்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

24x7_seithigal
24x7_seithigal

 

imd

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும். தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதேபோல், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

chennai police incident... the excitement again

 

காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஓட்டேரி போலீசார் விசாரணைக்காக ஆகாஷை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் விசாரணையின்போது காவல் நிலையத்தில் ஆகாஷ்  தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகாஷ் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய தாக்கியதால் ஆகாஷ் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இதேபோல் கீழ்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

DMK List of District Secretaries Released!


திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று (28/09/2022) மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, தி.மு.க. அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தேர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே, தி.மு.க.வின் புதிய அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த ஆர்.எஸ்.பாரதி தி.மு.க. செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 “A blatant retaliation against Islamophobia by the BJP government” - Seeman

 

“பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வீரியமிக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்டுள்ள இக்கொடும் அடக்குமுறை நடவடிக்கையானது பாசிசப்போக்கின் உச்சமாகும். 

 

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுமைக்கும் இசுலாமிய மக்கள் மத ஒதுக்கலுக்கும், கொடுந்தாக்குதல்களுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிற வேளையில், இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பான நலவாழ்வுக்காகவும் பாடுபடுகிற வலிமைவாய்ந்த இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக்குமுறலையும், ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாடி, வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி, ஆட்சியதிகாரத்தை அடைந்து, இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமில்லாத நாட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற மக்கள் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்படுவது இந்நாட்டின் சனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும்.

 

ஆகவே, இத்தடை நடவடிக்கை என்பது பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவு செய்வதோடு, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் சட்டத்தின் உதவியோடு தடையைத் தகர்த்து மீண்டுவர துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Last week E; Lizard today; Controversy continues

 

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் ஆவின்பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மதுரையில் விற்கப்பட்ட ஆவின் பால் பக்கெட்டில் ஈ இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையவைத்தது. பால் பேக்கிங் செய்த பொழுது தவறுதலாக நடந்துவிட்டது என அதிகாரிகளால் சொல்லப்பட்டது. 

 

இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் விற்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி மிதந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் அதை வீடியோ காட்சியாகவும் பதிவு செய்து கொண்டார். 

 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் மதுரையில் பால் பாக்கெட்டில் ஈ இருந்த சம்பவத்தில் மதுரை ஆவின் உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பேக்கிங் செய்ய பைகளை வழங்கும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆவின் பால் பாக்கெட்டில் பல்லி இருந்தது ஆவின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

“34 thousand crores for the agriculture sector; I have never seen this in my life” KN Nehru

 

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக எதுவும் செய்யவில்லை எனவும் வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

 

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அவர் பேசிய போது, “தொடர்ந்து சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு முதல்வர் நல்ல பணிகளை செய்து கொண்டுள்ளார். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தந்துள்ளார். வேளாண் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. முதன் முதலில் நான் அமைச்சராகும் போது தமிழ்நாட்டின் பட்ஜெட் வெறும் 50 ஆயிரம் கோடி தான். இன்று வேளாண் துறைக்கு மட்டும் 34 ஆயிரம் கோடி தந்துள்ளார். 10 ஆண்டுகாலம் அதிமுக எதையும் செய்யவில்லை. எல்லா நகரங்களிலும் பேருந்து நிலையம் எல்லா நகரங்களிலும் மார்கெட் அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்” என கூறினார்.

 

மேலும் பேசிய அவர், “மழைநீர் வடிகால் 1100 கிலோ மீட்டர் அளவிற்கு நடைபெறுகிறது என சொன்னால் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறுகிறது. இது இங்கு மட்டுமல்ல ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 1400 கோடி பணம். இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1400 கோடி பணம் அனைத்து மக்களும் வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என சொல்லி அதை செய்து கொண்டிருக்கிறார். இந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை கலைஞர் பார்த்த துறை என்பதால் தனி கவனத்துடன் செயல்படுகிறார்” எனக் கூறினார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !