Skip to main content

கண்ணபிரான் கைது.! என்கவுண்டருக்கு தயாராகும் நெல்லை போலீஸ்..!!

24x7_seithigal
24x7_seithigal
kannabiran


திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான நெல்லை தச்சநல்லூர் சத்திரப்புதுக்குளத்தைச் சேர்ந்த கண்ணபிரானை அவசரம் அவசரமாக திங்களன்று இரவு வேளையில் கைதுச்செய்துள்ளது நெல்லை சிட்டிப் போலீஸ்.. 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 21 வழக்குகளைக் கொண்ட இவரைக் கைது செய்தது என்கவுண்டருக்குத் தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

 

 

"கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மல்லிகை திருமண மண்டபத்தில் சேலம் மத்தியச்சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருந்த முத்துக்குமாருக்குத் திருமணம் நடந்துள்ளது. அத்திருமணத்திற்கு அவருடன் அதே சிறைச்சாலையில் தண்டைனையை அனுபவித்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் கண்ணபிரான் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான்பாண்டியனுக்கும் அழைப்பிதழ் சென்றிருக்க, இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே சென்றிருக்கின்றனர். இவ்வேளையில், ஆழ்வார் திருநகரி கேம்பலாபாத் அருகிலுள்ள ஆற்றுப்பாலத்திலிருந்து 6 நபர்கள் கொண்ட கும்பல் ஜான்பாண்டியன் ஆதரவாளர் அழகர்சாமி சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்கி தப்பித்து ஓடியுள்ளது. " இதனை செய்தது கண்ணபிரான் டீமே.! " என ஆரம்பக் கட்டத்தில் தெரியப்படுத்தினாலும், ஜான்பாண்டியன் அதனை ஏற்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
  nellai


அதன் பிறகு ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனை செய்தது, பள்ளமடை பாலமுருகன், மாவடி பன்னீர்முருகன் மற்றும் கண்ணபிரானே என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக மூவரையும் அவசரம் அவசரமாக கைது செய்துள்ளது போலீஸ் உதவி கமிஷனர்கள் கிருஷ்ணசாமி, சுபாஷ், இன்ஸ்பெக்டர்கள் ராமையா, சோமசுந்தரம், வனசுந்தர் தலைமையில் தனிப்படை போலீசார் டீம். ஜான்பாண்டியன் தரப்பே, அவர்கள் இல்லை என்று கூறியபிறகு இவர்களைக் கைது செய்வது யாரை திருப்திபடுத்த..? இல்லை என்கவுண்டருக்கா..?" என்ற கேள்வி தான் எங்களிடையே நிலவுகிறது." என்கின்றனர் கண்ணபிரான் தரப்பினர். கண்ணபிரானின் கைதைக்கண்டித்து நெல்லை மாநகரக் காவல்துறை எல்கைக்குள் 9 பேருந்துகளும், புறநகர் மாவட்டத்தில் 10 பேருந்துகளுமாக இதுவரை மொத்தம் 12 பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளது.
 

Nellai (2)


உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, " பொதுவாக பண்ணையார் குடும்பத்திற்கும், பசுபதி பாண்டியன் குடும்பத்திற்கும் தீராப் பகை. அதனால் இதுவரை பல கொலைகள் நடந்தேறியுள்ளது. பசுபதி பாண்டியனும் கொல்லப்பட, அதற்குக் காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்குவேன் என சபதமிட்டதோடு கடந்த சில வருடங்களுக்கு முன் பழையகாயலில் உள்ள சுபாஷ்பண்ணையாரின் தோட்டத்திற்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகியோரைக் கொன்று தலையை மட்டும் வெட்டி எடுத்து தெய்வசெயல்புரத்திலுள்ள பசுபதிபாண்டியனின் பட்ம் முன் வைத்து தப்பித்தது இவரது டீம். இதில் சுபாஷ்பண்ணையார் தப்பிக்க மீண்டும் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. யார் அசந்தால் யார் தலையை கொய்வது என..?. இந்நிலையில் மீண்டும் சுபாஷ்பண்ணையாரை குறிவைத்து இயங்கியதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைக்க, இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் கண்ணபிரான். விரைவில் துப்பாக்கி வெடிக்கும்." என்றார் அவர்.

என்கவுண்டருக்கு தயாராகியுள்ளது நெல்லை போலீஸ்..! துப்பாக்கி வெடிக்குமா..?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தூத்துக்குடி மாவட்டம், புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அடிப்படையில் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர். துணிகளுக்கு நீராவி வைக்கும் பழக்கம் என்பதால் நீராவி முருகன் என்றழைக்கப்பட்டவர்.

 

சகாக்களை சேர்த்துக் கொண்டு சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டுவந்தவன். பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறவன் நீராவி முருகன். தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் இவன் மீது பல திருட்டு கேஸ்கள் பதிவாகியுள்ளன.

 

காலப் போக்கில் தன்னுடைய திருட்டுகளை சென்னை, சேலம், ஈரோடு, நாமக்கல் என்று விரிவுபடுத்திய நீராவி முருகன், பல வழக்குகளால் ரவுடி லிஸ்ட்டில் வைக்கப்பட்டவன். கூலிக்கு ஆளை அடிக்கும் கூலிப்படைத் தலைவனாக மாறிய நீராவி முருகன் கொலைச் செயலுக்கு தனது ஆட்களையும் அனுப்பி வந்திருக்கிறான்.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் ஒரு டீச்சரிடம் செயின் பறித்ததில் சி.சி.டி.வி. காட்சியின் மூலம் வேளச்சேரி போலீசிடம் சிக்கியதால், இவனது திருட்டு எம்மோவை அறிந்த வேளச்சேரி போலீசார், நீராவி முருகனின் காலை ஒடித்து விட்டதால் சற்று விந்தி விந்தி நடக்கிற நிலைக்கு ஆளானான்.

 

கடந்த 2011-ன் போது தூத்துக்குடியின் தி.மு.க. மாவட்ட துணை செயலாளரான ஏ.சி.அருணாவுக்கும், வேறு சிலருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வீட்டினருகே ஏ.சி.அருணா வெட்டிக் கொல்லப்பட்டதில் கூலிப்படையாக நீராவி முருகன் முன் நின்று செயல்பட்டு வழக்கில் மாட்டியவன். இந்தக் கொலை வழக்கின் மூலம் தான் நீராவி முருகனின் பெயர் வெளி உலகில் பிரபலமாகி, ரவுடி என்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. மூன்று கொலை வழக்குகள் மற்றும் 30- க்கும் மேற்பட்ட பிற வழக்குகளில் இருந்ததால், நீராவி முருகனை ஈரோடு போலீசார் பிடிக்க திட்டமிட்ட போது தப்பியிருக்கிறான்.

 

இதையடுத்தே திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் நீராவி முருகன். இந்த டீம் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா தலைமையில் செயல்பட்டது.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தூத்துக்குடி மாவட்ட மணியாச்சிப் பக்கமுள்ள பாறைக் குட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.இசக்கிராஜா, கடந்த 2020- ன் போது கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாகப் பணியிலிருந்தவர். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் எஸ்.ஐ. இசக்கிராஜா, ”என்னுடைய காவல் லிமிட்டில், ரவுடியோ, திருடர்களோ இருந்தால் வெளியேறிடுங்க; இல்லன்னா என் துப்பாக்கி தான் பேசும். என்கவுன்ட்டர் தான்” என தன்னுடைய ஃபேஸ்புக்கிலும், பதிவிட்டவர் அதனை  ஆடியோவாகவும் வெளியிட்டது சர்ச்சையாகியிருக்கிறது. 

 

ஆனால், அதன் காரணமாகவே அவரது காவல் லிமிட்டில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில் தான் எஸ்.ஐ.இசக்கி ராஜாவின் டீம் நீராவி முருகனைப் பல இடங்களில் தேடியுள்ளது. நீராவி முருகனும், எஸ்.ஐ.இசக்கிராஜாவும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீராவி முருகன் பற்றிய துல்லிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் இசக்கிராஜா என்பதால் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா.

 

கடந்த பிப் 15 அன்று ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் வீட்டில் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த நீராவி முருகன், அவரது காரையும் திருடிச் சென்ற மிகப் பெரிய கொள்ளை என்பதால், எஸ்.ஐ. இசக்கிராஜா அவனுக்குப் பொறி வைந்தவர் அவனது செல்போனை டிரேஸ் செய்ததில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை மூன்று நாட்களாகக் காட்டியிருக்கிறது.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

அதனால் சற்றும் தாமதிக்காத எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை வளைத்திருக்கிறார்கள் தன்னுடைய 5001 பதிவு எண் கொண்ட இன்னோவா காரில் தப்பிய நீராவி முருகனை அப்படியே வளைத்த எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், பகல் 11.00 மணியளவில் நாங்குநேரியின் பக்கமுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தின் பிரிவுச் சாலையின் மீனவன்குளம் யூகலிப்ட்ஸ் மரக்காடுகளுக்குக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 

 

அந்தப் பகுதியில் வைத்து விசாரணை என்று போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் நீராவி முருகன்போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் எஸ்.ஐ.முத்துராஜாவால் என்கவுண்டர் செய்ப்பட்டிருக்கிறான். இதில் எஸ்.ஐ.இசக்கிராஜாவுக்கு தலையில் வெட்டு; காவலர்களான சத்தியராஜ், கனகமணிக்கும் வெட்டு விழுந்திருக்கிறது என்கிறார்கள்.

 

ROWDY NEERAVI MURUGAN POLICE ENCOUNTER

 

தன்னுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் எஸ்.ஐ.இசக்கிராஜா, டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

niravi Murugan Encounter ... What Happened?

 

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் என்ற ரவுடி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

niravi Murugan Encounter ... What Happened?

 

பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவிமேடு என்ற இடத்தில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டுவந்த முருகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக நீராவி முருகன் மீது வழக்குகள் இருந்தது. ஒட்டன்சத்திரம் பகுதியில் மருத்துவர் வீட்டில் தம்பதிகளை கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 150 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நீராவி முருகனை தேடிவந்தனர்.

 

இந்நிலையில் நெல்லை களக்காடு பகுதியில் நீராவி முருகனை கைது செய்யமுற்பட்டபோது போலீசாரை திரும்ப தாக்கி வெட்ட முயன்றதால் நீராவி முருகன் என்கவுன்டர் செய்யப்பட்டதாகவும், 4 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Nellai Rowdy Steam Murugan Encounter!

 

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் என்ற ரவுடி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவிமேடு என்ற இடத்தில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டுவந்த முருகன் மீது 30க்கு மேற்பட்ட கடத்தல் வழக்குகள் இருந்த நிலையில் போலீசார் அவனை தேடிவந்துள்ளனர். தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இந்த என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. பதில் தாக்குதலின் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது சம்பவ இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை

 

இந்த என்கவுன்டர் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்தாலும் இதுதொடர்பான தகவல் நெல்லை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினரால் இந்த என்கவுன்டர் நிகழ்த்தப்பட்டிருப்பதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

chengalpattu cirem incident... police investigation

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த இரண்டு கொலைகள்  பரபரப்பை ஏற்படுத்த, கொலையை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இரண்டு ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த அப்பு கார்த்திக் என்பவரை, மூன்றுபேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகேஷ் என்பவரை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பித்துச் சென்றனர். போலீசார் விசாரணையில் இரண்டு கொலையையும் செய்தது ஒரே கும்பல் என்பது பின்னரே தெரியவந்தது.

 

chengalpattu cirem incident... police investigation

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று மாதவன் என்பவனையும் கொலைக்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொடுத்த ஜெசிகா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவர் செங்கல்பட்டை அடுத்துள்ள இருக்குன்றம் பாலாறு பகுதியில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைக்க அங்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பதுங்கி இருந்த ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீனை போலீசார் பிடிக்க முற்படுகையில் அவர்கள் போலீசாரை திரும்ப தாக்கினர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூடில் இருவரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

 

chengalpattu cirem incident... police investigation

 

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு காதலே காரணம் எனத்தெரியவந்துள்ளது. என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி தினேஷின் சகோதரியை ஹரிகிருஷ்ணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் தினேஷ் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹரிகிருஷ்ணன் நண்பர்கள் மகேஷ், அப்பு கார்த்திக் ஆகியோர் தினேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அவனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு இந்த கொலை சம்பவத்தை நிகழ்ந்தியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிஸியாக உள்ளனர். அதேபோல், வரும் நாட்களில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

 

இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எழும்பூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ, தனது தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து 'இரட்டை இல்லை' சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !