Skip to main content

“பூமி திருத்தி உண்” –நிதியமைச்சர்! “ நிலைமை அப்படியில்ல, நெல் அறுக்க கூட முடியலை” – வேதனையில் விவசாயிகள்!

24x7_seithigal
24x7_seithigal

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பருவமழை  நல்ல முறையில் பொழிந்ததால் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் அறுவடை செய்யக்கூடிய கார்த்திகை மாதத்தில் பின்மழை பெய்த காரணத்தினால்  விளைநிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டு விளைந்த  நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

 

 Farmer in pain


மழை, முன்பனி, பின்பனி என இயற்கை பருவ மாற்றங்களால் நெல் அறுவடை தாமதமாகி தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ‘வெந்த புண்ணில் வெல் பாய்ச்சுவதை போல’ விவசாயிகளின் வேதனையை அதிகரிக்கும் விதமாக நெல் அறுவடை செய்யும்  இயந்திரங்களின் பற்றாக்குறையால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  மேலும் பருவநிலை மாற்றத்தால் நெல்மணிகள் புகை அடித்தும்,  தரையில் படுத்து விட்டதினால்  மறுமுளைப்பும் ஏற்பட்டு வருகிறது என்றும்  விவசாயிகள் வேதனையில் வெம்முகின்றனர்.

 

 Farmer in pain


 கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளரும், வேளாண் இணை இயக்குனரும் விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை இயந்திர உரிமையாளர்களை அழைத்து பேசி நெல் அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு பெல்ட் இயந்திரங்கள் ரூபாய் 1800, டயர் இயந்திரங்கள் ரூ 1300 என கட்டணம் நிர்ணயித்தனர். ஆனால் டீசல் விலை, ஓட்டுனர் சம்பளம் ஆகியவற்றை காரணம் காட்டி பெல்ட் இயந்திரங்கள் ரூ 2800-ம், டயர் இயந்திரங்கள் 1500-ம் வாங்குகின்றனர். அப்படியும் உரிய காலத்தில் அறுவடை செய்ய இயந்திரங்கள் கிடைப்பதில்லை. இதனால் நெல் மணிகள் வயலிலேயே சிந்தும் அவல நிலை. வெளி மாவட்டங்களுக்கு சென்று இயந்திரங்கள் கொண்டு வந்து அறுவடை செய்தாலும் ஒரு நாளில் 3 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்ய முடிகிறது.

இப்படி அறுவடை செய்த நெல் அரசின் கொள்முதல் நிலையங்களில் ரூ.760-ம், வண்டி வாடகை கொடுத்து அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றால் ரூ 1050  முதல் 1300 வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

 

ttt


இதுகுறித்து சாத்துக்கூடல் விவசாயி சக்திவேல் கூறும்போது, சட்டீஸ்கர் மாநிலத்தில் 100 கிலோ குவிண்டால் நெல் ரூபாய் 2500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதே நூறு கிலோ குவிண்டால் ரூபாய் 1905 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு 1 கிலோ நெல்லுக்கு அரசின் ஊக்கத்தொகை 25 பைசா வழங்கப்படுகிறது. இங்கு 19.05 பைசா வழங்கப்படுகிறது. நானும் விவசாயி என கூறுகிற நம்முடைய முதலமைச்சர் விவசாயிகளுக்கான விளைபொருட்களுக்கு கூடுதல் விலை உயர்த்தினால் தானே விவசாயிகள் வாழ்வாதாராம் உயரும்.  அதேபோல் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பூமி திருத்தி உண்’  என்ற ஒளைவயாரின் ஆத்திசூடியை கூறி தாக்கல் செய்கிறார். ஆனால் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிடலாமா… என யோசிக்கும் நிலைதான். விவசாயிகள் வளமான முறையில் விவசாயம் செய்யும் சூழலை அரசுகள் ஏற்படுத்தி தரவில்லை. விளைவித்த நெல்லை அறுவடை செய்ய வாய்ப்புகளில்லை. அவற்றிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. 15 லட்சம் கோடி கடன் தரப்படும் என்கிறார் நிதியமைச்சர். விவசாயிகளை மேலும் மேலும் கடனாளியாக்குவதற்கு பதில் உரிய வாய்ப்புகளை வழங்கினாலே விவசாயம் செழிக்கும், விவசாயி வாழ்வான் “ என்கிறார்.  

 எனவே அரசுகள் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகள் பயிரிடும்  விளைச்சல் குறித்து தகவலை சேகரிக்க வேண்டும் என்றும்,  வேளாண் துறை மூலம்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, தேவையான இயந்திரங்களை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என்றும்  விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

New procedure in opening water...! - Farmers in struggle

 

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி என மூன்று வாய்க்கால்களில் விவசாயம், கால்நடை மற்றும் குடிநீர் தேவைகளுக்காக முறை வைத்து நீர் திறந்து விடுவது வழக்கம். இதில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடக்கிற கீழ்பவானி வாய்க்கால் தான் பிரதானமானது.

 

தற்போது கீழ்பவானி ஆயக்கட்டில் பொதுப் பணித்துறையினர் முதல் முறையாக முறை வைத்து நீர் விடும்முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை கண்டித்து ஏராளமான விவசாயிகள் விவசாய சங்க தலைவர்கள் ரவி, துளசி மணி சுதந்திரராசு, செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர். 

 

இது குறித்து அவர்கள் கூறும் போது, “கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டில் உள்ள 1.035 லட்சம் ஏக்கர் நஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அரசு வெளியிட்ட உத்தரவின் படி அடுத்த 120 நாட்களுக்கு தடையின்றி நீர் விடப்படும். ஆனால் தற்போது அதிகாரிகள் வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு கிளை வாய்க்காலிலும் நீர் விடுவதை நிறுத்துகின்றனர். 

 

கடந்த 30 நாட்களில் நெல் நாற்று தயார் செய்யப்பட்டு தற்போது நடவு பணிகள் துவங்கியுள்ளன. நடவு பணியின் போது நீர் நிறுத்தப்படுவதால், நெல் நடவு மற்றும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் இதை குறிப்பிட்டு மனு அளித்தோம். ஆனால், அதிகாரிகள் கால்வாயில் அதிக நீர்க்கசிவு இருப்பதால் முறை வைத்து நீர் விடுவதாக கூறுகின்றனர். இதன் மூலம் கால்வாயில் கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இந்த நடைமுறை இல்லை இதை கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை அமலாக்க அதிகாரிகள் செய்யும் தந்திரமாக கருதுகிறோம். 

 

அணையில் மொத்தம் உள்ள 105 அடியில் 102 அடிக்கு தண்ணீர் உள்ளது. வழக்கமாக 2300 கன அடி நீர் பிரதான வாய்க்காலில் திறந்து விடப்படும். ஆனால், இப்பொழுது அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் விடுகிறார்கள். முறை நீர் பாசனம் விவசாயிகளுக்கு உதவுவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒருமுறை ஒரு கிளை வாய்க்காலில் நீர் நிறுத்தப்பட்டால் அந்த கிளை வாய்க்கால் உள்ள கடை மடைப்பகுதிக்கு தண்ணீர் சென்ற சேர இரண்டு நாட்களாகும். ஆயக்கட்டில் தொண்ணூறு சதவீத அளவிற்கு நெல் சாகுபடி தற்பொழுது செய்யப்படுகிறது. புதிய நடைமுறையால் அது முற்றிலும் பாதிக்கும். எனவே இதை எதிர்க்கிறோம். இது சம்பந்தமாக வரும் 30-ஆம் தேதி ஈரோடு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேச இருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டத்தையும் நடத்த இருக்கிறோம்”  என்று அவர்கள் கூறினார்கள்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

விவசாய நிலத்தில் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குடும்பமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது.

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சேவகானுபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் எல்லா ரெட்டி. இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்பட்டு வந்தது. ஆரம்பத்திலிருந்தே இதற்கு விவசாயி எல்லா ரெட்டி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் பாதுகாப்பில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த எல்லா ரெட்டி குடும்பத்தினர் விஷ பாட்டிலை எடுத்துக்கொண்டு குழிக்குள் இறங்கி தற்கொலைக்கு முயன்றனர்.

 

'மின்கோபுரம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிட்டோம். ஆனால் எங்களுக்கு உதவ யாருமே இல்லை' என கூச்சலிட்டு கத்தினர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார், குடும்ப உறுப்பினர் சிலரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்  உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Father who passed away abroad; Daughter requesting to recover the body!

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த கிரிஜா என்பவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் சவூதிக்கு சென்றவர், அங்குள்ள ரியாத் நகரில் ஒரு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். கடந்த செப்டம்பர் 21 அன்று அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் கீழே விழுந்து உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த எனது தந்தை அன்புவின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

 

ரியாத்தில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சி.சி.டி.வி காட்சிகள் தன்னிடம் உள்ளதாக கூறி அதனையும் மாவட்ட ஆட்சியரிடம் காட்டினார் மகள் கிரிஜா. அந்தக் சி.சி.டி.வி கட்சியில் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த அன்பு திடீரென கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சி உள்ளது.

 

இந்த மனுவை பெற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இறந்தவரின் உடலை கொண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி அனுப்பி வைத்தார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Love issue youngster arrested by police near cuddalore

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழன்(25). இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. காதலன் காதலி இருவரும், அவ்வப்போது அடிக்கடி வெளியூர் சென்று சுற்றி வந்துள்ளனர்.

 

அந்த காலகட்டத்தில் அந்த இளம் பெண்ணை மிரட்டி பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு முத்தமிழனின் நடவடிக்கை பிடிக்காததால், அந்த பெண் திடீரென அவருடனான பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இரண்டு வருடங்களாக ஒன்றாக சுற்றி திரிந்து, பேசி பழகிய காதலி திடீரென தன் காதலை முறித்து கொண்டதால் மனம் உடைந்த முத்தழகன் அந்தப் பெண்ணிடம் பேச பல முறை முயற்சித்துள்ளார்.  ஆனால் அந்த பெண் முத்தழகனை கண்டுகொள்ளவில்லை. 

 

இதில் ஆத்திரத்தில் இருந்த முத்தழகன், இருவரும் காதலித்த காலத்தில் நெருங்கி பழகியபோது அவரை மிரட்டி தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண். காதலனை தேடி பிடித்து சண்டையிட்டுள்ளார். அப்போது முத்தழகன் அந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனே அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்க, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 Old man wandering with petitions weighing 10 kg... carrying misery on his head for years!

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் அய்யாசாமி (வயது 70). இவருக்கு சொந்தமான 3 1/4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதற்காக முதியவர் அய்யாசாமி கடந்த 15 ஆண்டு காலமாக நிலத்தை மீட்பதற்காக போராடிய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு முதியவர் அய்யாசாமிக்கு சாதகமாக வந்துள்ளது.

 

இந்நிலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தபோது, தனக்கு சொத்து வேண்டாம் என அய்யாசாமியின் தம்பி கூறிவிட்டு சென்றதாக முதியவர் தெரிவிக்கிறார்.  பின்னர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு, அய்யாசாமிக்கு சாதகமாக வந்த பின்பு, அவரது தம்பி தங்கராசு, 3 1/4 நிலத்தை பயிர் செய்ய விடாமல் மிரட்டுவதாக அய்யாசாமி தெரிவிக்கிறார். இந்நிலையில் தனது சொத்தை மீட்பதற்காக  பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் என  அனைத்து அதிகாரிகளுக்கு மனுகொடுத்து வந்துள்ளார். ஆனால் நிரந்தர தீர்வு எட்டப்படாததால் சுமார் பத்து கிலோ எடை கொண்ட, புகார் மனுக்களை துணியால் கட்டி, தலையில் சுமந்து கொண்டு,  அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்.  

 

விடாமுயற்சியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் 70 வயது முதியவர் அய்யாசாமி ஏறாத அரசு அலுவலகங்களே இல்லை என்றும், நீதிமன்ற வாசல் வரை சென்று உத்தரவு வாங்கியும், அவரது சொத்தை மீட்டு தர அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டும், புகார் மனுக்களை தலையில் சுமந்து கொண்டும் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் அய்யாசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

 

தள்ளாத வயதிலும் தளராத போராடும் எளிய மனிதரின் குரல் அரசு இயந்திரங்களின் காதுகளுக்கு எட்டுமா..?

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !