Skip to main content

ஜாமீனுக்கு மேல ஜாமீன்.. விரைவில் வெளிவரும் ஜெயக்குமார்

24x7_seithigal
24x7_seithigal

 

admk Jayakumar coming out soon!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு  உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

 

திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஜாமீன் பெற்ற அதே நேரத்தில் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறையிலேயே இருக்கும் நிலை ஜெயக்குமாருக்கு  ஏற்பட்டது.

 

8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமில்லாது அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பண மோசடி வழக்கில் திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மென்ட்  காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது இருந்த 3 வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் விரைவில் ஜெயக்குமார் சிறையிலிருந்து வெளிவருவார் என அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

If you know how to survive, you will get posts in DMK!- Edappadi taunted in the protest meeting!


விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்,  சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கண்டனப் பொதுக்கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. தென்மாவட்டத்திலும் தனக்கு செல்வாக்கு உண்டு என்பதை நிரூபிப்பதற்காக சுற்றுப்பயணத் திட்டம் வகுத்துள்ள அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்திருந்தார். 

 

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது, “ஒரு சமுதாயத்திற்கு எதிரானவர் எடப்பாடியார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்து சமுதாயத்தினருக்கும்  தலைவனாக, பாதுகாவலனாகத்தான் எடப்பாடியார் திகழ்கிறார். இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கு முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாயத்தினர், முத்தரையர் சமுதாயத்தினர், இஸ்லாமிய சகோதரர், கிறிஸ்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து எடப்பாடியாரை வரவேற்றுள்ளனர்.  

 

அனைத்து சமுதாய மக்களின்  நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் திகழ்கிறார். எடப்பாடியார் ஆட்சியில்தான் எல்லாம் கிடைத்தது. எல்லா விலையையும் கட்டுக்குள் வைத்திருந்தார். தற்போது எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. பாட்டு பாடியே பெயர் வாங்கியவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் தி.மு.க.வினர்” என்றார். 

If you know how to survive, you will get posts in DMK!- Edappadi taunted in the protest meeting!

சிறப்புரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மிகப்பெரிய மாநாடு போல இந்த கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில்,  இந்த கண்டன பொதுக்கூட்டம் அமைந்திருக்கிறது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அத்தனையையும், சாதனைகளாக மாற்றி காண்பிப்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதற்கு இந்த கண்டனப் பொதுக்கூட்டமே சாட்சி. தற்போதைய முதல்வர் ஸ்டாலின்,  திராவிட மாடல் ஆட்சி என்று அடிக்கடி கூறிவருகிறார். எது திராவிட மாடல் ஆட்சி? 

 

மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏராளமான வாக்குறுதிகளை ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் ஸ்டாலின் கூறினார். தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை இதுவரை தி.மு.க. நிறைவேற்றவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்  கொண்டுவந்த திட்டம் என்பதற்காக, பொறாமை காரணமாக, அம்மா மினி கிளினிக்கை தி.மு.க. மூடிவிட்டது. 

If you know how to survive, you will get posts in DMK!- Edappadi taunted in the protest meeting!

கமிஷன், கலெக்சன், கரப்சன்.. இதுவே இன்றைய தி.மு.க. ஆட்சியின் அவல நிலை. தி.மு.க. அமைச்சர்கள் மக்களிடம் அநாகரிகமாகப் பேசுகிறார்கள்,  நடந்துக் கொள்கிறார்கள். தி.மு.க. அமைச்சர் ஒருவர் பெண்களைப் பார்த்து, ஓசியில்தானே போகிறாய் என்று கேவலமாகப் பேசியிருக்கிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு, சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம்,  விரைவில் கொடுப்போம் என்று நக்கலாகப் பதில் கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். மத்திய அமைச்சராக இருந்த ஒருவர்,  மக்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர்கள் குறித்து பேசும்போது, ஒரு அமைச்சர் கடுமையான வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறார்.

 

பொதுக்கூட்ட மேடையில் ஒரு அமைச்சர் பேசும்போது, குற்றவாளியை நிரபராதி ஆக்குவதும், நிரபராதியை குற்றவாளியாக்குவதும் எங்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 

 

கரண்டைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதை எல்லாம் தாண்டி, கரண்ட் பில்லைப் பார்த்தாலே ஷாக் அடிக்கக்கூடிய நிலையில் மின்கட்டணம்  உயர்ந்திருக்கிறது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அமைச்சர்கள்  வாய்க்குவந்தபடி பேசுவதும், தமிழக மக்களை ஏமாற்றுவதும்தான் திராவிட மாடல் ஆட்சி. 

If you know how to survive, you will get posts in DMK!- Edappadi taunted in the protest meeting!

கல்வியில் 2030 -ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை, 2019- ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அடைந்துவிட்டது. தமிழகம். இதுதான் அ.தி.மு.க. ஆட்சி. அதுதான் சாதனை. தி.மு.க. அமைச்சர்களை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு, அ.தி.மு.க. செயல்படுகிறது. ஒரு மதத்தையோ, குறிப்பிட்ட சமூகத்தையோ, சமுதாய மக்களையோ புண்படுத்தும் விதத்தில், அ.தி.மு.க. தலைவர்களோ தொண்டர்களோ பேசியது கிடையாது.

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக் கூட பிரச்சனையில், தி.மு.க. அரசு உரிய நேரத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால், பெரிய கலவரமாக மாறியது. இதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளிப் பிரச்சனையில், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளிக்கூடத்தைச் சேதப்படுத்தியவர்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ஒரு பொம்மை முதல்வர் போல்  ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். 

 

தமிழகம் போதைப் பொருளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் தமிழகத்திற்கு வருகிறது என்று அமைச்சர்கள் கூறுவதை ஏற்கமுடியாது. போதைப் பொருள் கொண்டுவந்தாலும், போதைப் பொருளை விற்பனை செய்தாலும், கட்டுப்படுத்துவது தமிழக அரசின் கடமை.  போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் திணறுகிறார். 

If you know how to survive, you will get posts in DMK!- Edappadi taunted in the protest meeting!

அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிககோளோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். ஸ்டாலின் நினைப்பது ஒருக்காலும் நடக்காது. ஒரு அ.தி.மு.க. தொண்டனைக்கூட ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அ.தி.மு.க.வில், உழைப்பவர்கள் என்றும் உயர்ந்துகொண்டே இருப்பார்கள். உழைப்பவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை உண்டு. தி.மு.க.விலோ, பிழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை உண்டு. பதவிகளும் தருவார்கள்.  

 

தி.மு.க. அரசு ஏமாற்றுகிறதே தவிர, எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே தி.மு.க. நடத்தும் திராவிட மாடல் ஆட்சி.. ” என தி.மு.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"We have given many projects to Madurai"- Edappadi Palaniswami speech!

 

மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நான்கரை லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கியது அ.தி.மு.க. அரசு. சொத்து வரியை 150% உயர்த்தியுள்ளது தி.மு.க. அரசு. தமிழகத்தில் மின் கட்டணத்தையும் 53 சதவீதம் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தை விட பல மாநிலங்கள் குறைந்த மின் கட்டணத்தையே வசூலிக்கின்றன. 

 

சொத்து வரி, மின் கட்டண உயர்வு என வாக்களித்த மக்களுக்கு இரண்டு போனஸ் வழங்கியுள்ளது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி, ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ஏராளமான திட்டங்களை தந்துள்ளோம். மதுரை தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீரைத் தேங்கச் செய்தது அ.தி.மு.க. அரசு. மதுரையில் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு, 925 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் கொண்டு வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

O. Panneerselvam meeting with director Bharathiraja!


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

 

சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோருடன் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிகிச்சை முடிந்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் பாரதிராஜாவிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

20 people were injured in the explosion of cylinder godown... two people were arrested!

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. திடீரென நேற்று மாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்று உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

 

சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை நேற்று இரவு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்தித்து நலம் விசாரித்தார். இன்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருந்த அந்த குடோனில் கேஸ் சிலிண்டர்களை வைக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பெரிய கேஸ் டேங்கர்களை வைத்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் பணியும் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. அப்படி கேஸ் நிரப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 

இந்நிலையில் இந்த  வெடி விபத்து தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம் உட்பட 5 பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது, உயிருக்கு பாதுகாப்பு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி கைது ஆகியோரை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Northern youth arrested for smuggling cannabis in the train!

 

 

மேற்குவங்க மாநிலம், கல்கத்தாவில் இருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சென்னை வழியாக புதுச்சேரிக்கு செல்லும். இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். அதன்படி நேற்று காலை ஹௌரா எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ஜங்ஷன் அருகே வந்தபோது ரயில்வே பாதுகாப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். 

 

அப்போது ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் ஒரு வாலிபரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ எடைக்கொண்ட கஞ்சா இரண்டு பொட்டலங்களாக இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், ஒரு லிட்டர் பாட்டிலில் கஞ்சாவை ஆயிலாகதயாரித்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்திவந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீசாரின் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்சி பகுதியைச் சேர்ந்த சிசீரா குமார் கிரி(32) என்பதும், இவர் புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களைச் தேர்ந்த சில நபர்களுக்கு ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா மூலம் தயாரிக்கப்பட்ட ஆயிலையும் விற்பனைக்கு கடத்தி வந்து தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !