Skip to main content

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... கோவையில் பரபரப்பு...

24x7_seithigal
24x7_seithigal
coimbatore government hospital

 

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. 

 

ஐஸ்வர்யாவின் பெற்றோர் ஐஸ்வர்யாவையும், ரத்தீஷ் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா இந்த மூன்று மாதங்களாக ரத்தீஷை சந்திப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறார். தன்னுடன் பேசுமாறு ஐஸ்வர்யாவை பலமுறை ரத்தீஷ் வலியுறுத்தி வந்துள்ளார். ஐஸ்வர்யா இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பலமுறை ரத்தீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

ddd

 

இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஐஸ்வர்யாவைத் தேடிச் சென்ற ரத்தீஷ், தன்னிடம் தொடர்ந்து பேசுமாறும் காதலிக்குமாறும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் அங்கு வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவை ரத்தீஷ் கத்தியால் நான்கு இடங்களில் குத்தியதாகவும், அதனைத் தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலையும் கத்தியால் குத்தியுள்ளார்.

 

காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா மற்றும் ரத்தீஷ் ஆகிய இரு குடும்பத்தினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரத்தீஷை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Husband's inappropriate relationship with another woman...Wife's shock!

வேறு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை மனைவிக் கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியைச் தீபக் என்பவருக்கு தீபா என்ற மாணவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. தீபக் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தீபக் அந்த பொண்ணுடன் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில், மனைவியைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தீபக்கிடம் கள்ளக்காதலியை விட்டு விட்டு தன்னுடன் வந்து வாழலாம் என தீபா தெரிவித்துள்ளார். பின்னர், தீபா உறங்க சென்ற போது, தான் அணிந்திருந்த வேஷ்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். 

 

காலையில் தீபா உறக்கத்தை விட்டு எழுந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

ஒரு லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்து மோசடி மனைவி, புரோக்கர் என பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் புரோக்கர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனக்கு தெரிந்த சரிதா என்ற ஏழை பெண் இருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். இளைஞரும் அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதில் 1,20,000 ரூபாயை புரோக்கராக செயல்பட்ட விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருமணத்திற்கு செலவு செய்துள்ளார்.

 

மேலும் அந்த பெண் குறித்து இளைஞர் விசாரித்ததில் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும், அவர் கேரளாவில் வசித்து வருவதாகவும், தான் ஆதரவற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி ஈரோட்டில் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சரிதா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  கடந்த மாதம் 22 ஆம் தேதி இளைஞரின் சொந்த ஊரான தாசப்பகவுண்டன்புதூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் சரிதாவை அந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

 

திருமணமாகி ஒரு சில நாட்களில் மனைவி சரிதாவின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார் அந்த இளைஞர். அப்பொழுது பெரியம்மா என்ற பெயரில் போனில் சேவ் செய்யப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு வாட்ஸப்பில் சரிதா அனுப்பியிருந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிர்ந்து போயுள்ளார் அந்த இளைஞர்.

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

அந்த வாய்ஸ் நோட் ஆடியோவில், ''அடுத்தவாரம் நீயா அழைச்சுட்டு போறமாதிரி வா... போயிட்டு வேற ஏதாவது கனெக்சன் இருக்குதா பாரு. கிறுக்கனா இருக்கனும். போயிட்டு இங்க ஒரு வாரத்துல வரமாதிரி. வேற ஏதாவது ஆளு இருந்தா பாரு. ஆனா இது மாதிரி விவரமா வேண்டாம்.. சும்மா வயசு எச்சா இருக்கிற மாதிரி பாரு. ரெண்டு நாள்ல எஸ்கேப் ஆகுற மாதிரி ஆளா பாரு. திரும்ப ஓடி வந்துருவேன். நா ஓடிப்போயிட்டேன்னா இந்த பையன் எதுனா பண்ணிக்கும். அதுவேற பயமா இருக்குது'' என பேசியுள்ளார். இதனைக்கேட்டு மனமுடைந்த அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

 

இதுதொடர்பாக நண்பர்களிடம் அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் நண்பர்கள் ஆலோசனைப்படி தன் நண்பனுக்கும் திருமணம் செய்ய பெண் வேண்டும் என சரிதாவிடம் அந்த இளைஞர் கேட்டுள்ளார். அவரும் பெரியம்மா விஜயலட்சுமியிடம் தெரிவிக்க, விஜயலட்சுமி தன்னிடம் பெண் இருப்பதாககூறி 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டு பெண்ணுடன் தாசப்பகவுண்டன்புதூர் வந்துள்ளார். அப்பொழுது சுற்றிவளைத்து பிடித்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மோசடி கும்பலை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். மூன்று பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

chennai police incident... the excitement again

 

காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஓட்டேரி போலீசார் விசாரணைக்காக ஆகாஷை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் விசாரணையின்போது காவல் நிலையத்தில் ஆகாஷ்  தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகாஷ் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய தாக்கியதால் ஆகாஷ் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இதேபோல் கீழ்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Accident in cylinder godown...Commotion near Kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்று உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

 

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

bus and load auto incident police investigation



கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

 

கோபாலபுரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோரை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அய்யம்பாளையம் அருகே பேருந்து வந்த போது, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற நிலையில், எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது விபத்துக்குள்ளானது. 

 

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்த இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், தனியார் பேருந்து அருகில் இருந்த தோப்புக்குள் கவிழ்ந்ததால், அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !