Skip to main content

''அரசின் கஜானா ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்பட கூடாது'' - அன்புமணி

24x7_seithigal
24x7_seithigal

 

'' Government treasuries' should not be filled with butter in the hands of lepers' '- PMK Anbumani Tweet

 

தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.  காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்!

 

குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதல் உதாரணமும் இல்லை... கடைசி உதாரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்.

 

இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது. அதனால், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

20 people were injured in the explosion of cylinder godown... two people were arrested!

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. திடீரென நேற்று மாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்று உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

 

சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை நேற்று இரவு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்தித்து நலம் விசாரித்தார். இன்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருந்த அந்த குடோனில் கேஸ் சிலிண்டர்களை வைக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பெரிய கேஸ் டேங்கர்களை வைத்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் பணியும் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. அப்படி கேஸ் நிரப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 

இந்நிலையில் இந்த  வெடி விபத்து தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம் உட்பட 5 பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது, உயிருக்கு பாதுகாப்பு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி கைது ஆகியோரை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Northern youth arrested for smuggling cannabis in the train!

 

 

மேற்குவங்க மாநிலம், கல்கத்தாவில் இருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சென்னை வழியாக புதுச்சேரிக்கு செல்லும். இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். அதன்படி நேற்று காலை ஹௌரா எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ஜங்ஷன் அருகே வந்தபோது ரயில்வே பாதுகாப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். 

 

அப்போது ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் ஒரு வாலிபரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ எடைக்கொண்ட கஞ்சா இரண்டு பொட்டலங்களாக இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், ஒரு லிட்டர் பாட்டிலில் கஞ்சாவை ஆயிலாகதயாரித்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்திவந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீசாரின் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்சி பகுதியைச் சேர்ந்த சிசீரா குமார் கிரி(32) என்பதும், இவர் புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களைச் தேர்ந்த சில நபர்களுக்கு ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா மூலம் தயாரிக்கப்பட்ட ஆயிலையும் விற்பனைக்கு கடத்தி வந்து தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

ஒரு லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்து மோசடி மனைவி, புரோக்கர் என பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் புரோக்கர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனக்கு தெரிந்த சரிதா என்ற ஏழை பெண் இருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். இளைஞரும் அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதில் 1,20,000 ரூபாயை புரோக்கராக செயல்பட்ட விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருமணத்திற்கு செலவு செய்துள்ளார்.

 

மேலும் அந்த பெண் குறித்து இளைஞர் விசாரித்ததில் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும், அவர் கேரளாவில் வசித்து வருவதாகவும், தான் ஆதரவற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி ஈரோட்டில் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சரிதா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  கடந்த மாதம் 22 ஆம் தேதி இளைஞரின் சொந்த ஊரான தாசப்பகவுண்டன்புதூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் சரிதாவை அந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

 

திருமணமாகி ஒரு சில நாட்களில் மனைவி சரிதாவின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார் அந்த இளைஞர். அப்பொழுது பெரியம்மா என்ற பெயரில் போனில் சேவ் செய்யப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு வாட்ஸப்பில் சரிதா அனுப்பியிருந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிர்ந்து போயுள்ளார் அந்த இளைஞர்.

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

அந்த வாய்ஸ் நோட் ஆடியோவில், ''அடுத்தவாரம் நீயா அழைச்சுட்டு போறமாதிரி வா... போயிட்டு வேற ஏதாவது கனெக்சன் இருக்குதா பாரு. கிறுக்கனா இருக்கனும். போயிட்டு இங்க ஒரு வாரத்துல வரமாதிரி. வேற ஏதாவது ஆளு இருந்தா பாரு. ஆனா இது மாதிரி விவரமா வேண்டாம்.. சும்மா வயசு எச்சா இருக்கிற மாதிரி பாரு. ரெண்டு நாள்ல எஸ்கேப் ஆகுற மாதிரி ஆளா பாரு. திரும்ப ஓடி வந்துருவேன். நா ஓடிப்போயிட்டேன்னா இந்த பையன் எதுனா பண்ணிக்கும். அதுவேற பயமா இருக்குது'' என பேசியுள்ளார். இதனைக்கேட்டு மனமுடைந்த அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

 

இதுதொடர்பாக நண்பர்களிடம் அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் நண்பர்கள் ஆலோசனைப்படி தன் நண்பனுக்கும் திருமணம் செய்ய பெண் வேண்டும் என சரிதாவிடம் அந்த இளைஞர் கேட்டுள்ளார். அவரும் பெரியம்மா விஜயலட்சுமியிடம் தெரிவிக்க, விஜயலட்சுமி தன்னிடம் பெண் இருப்பதாககூறி 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டு பெண்ணுடன் தாசப்பகவுண்டன்புதூர் வந்துள்ளார். அப்பொழுது சுற்றிவளைத்து பிடித்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மோசடி கும்பலை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். மூன்று பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Daughter in law arrested in Mother in law case

 

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சிந்தாமணி(65). இவரது இளைய மகன் வேல்முருகன்(37). இவருக்கும் இவரது சகோதரியின் மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.  இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா, தனியாக வசித்து வந்தார். 

 

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வேல்முருகன் தனது உறவினர்கள் சிலரை அழைத்துச் சென்று சங்கீதாவிடம் சமாதானம் பேசி தன்னுடன் வாழ்வதற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன் பிற்கு சங்கீதா வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை சங்கீதாவின் பாட்டியும் வேல்முருகனின் தாயாருமான சிந்தாமணி கண்டித்து வந்துள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனக்கும் கணவர் வேல்முருகனுக்கும் இடையே மாமியார் சிந்தாமணியால் சண்டை வருகிறது என அவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். 

 

நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி வீட்டுக்குள் சென்று டீ சாப்பிடுவதற்காக பால் பாக்கெட் எடுத்துள்ளார். அப்போது சங்கீதா ஏற்கனவே தயார் நிலையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாமியார் சிந்தாமணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டி விட்டார். சிந்தாமணி போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர். அங்கே சிந்தாமணி உடலில் தீப்பற்றிய நிலையில் துடித்துள்ளார். உடனடியாக தீயை அனைத்து சிந்தாமணியை தீக்காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையல் சிந்தாமணி சிதம்பரம் மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மருமகள் சங்கீதா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு போலீசார் சங்கீதாவை கைது செய்துள்ளனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 RSS to go to court again

 

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அனுமதி கோரப்பட்ட நிலையில், திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்பொழுது தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !