Skip to main content

கேரளாவின் பிரபல திருநங்கை மரணம்..! விசாரணைக்கு உத்தரவிட்ட அரசு..! 

24x7_seithigal
24x7_seithigal

 

Transgender Annanyakumari passes away Kerala Government order to investigate

 

கேரள மாநிலம், கொச்சி இடப்பள்ளியைச் சேர்ந்தவர் திருநங்கையான அனன்யாகுமாரி (28). சமூக செயற்பாட்டாளரான இவர், எல்.ஜி.பி.டி.கியூ (LGBTQ) அமைப்பினரின் உரிமைக்காகப் போராடியவர். மேலும், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவந்தவர். சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஆதரவு குரலை எழுப்பியவர்.

 

இந்த நிலையில், அனன்யாகுமாரி கொச்சியில் உள்ள ரினோ மெடிக்கல் சிட்டியில் 2020 ஜூன் மாதம் பாலினம் மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு இரண்டு வாரத்திலேயே அனன்யாகுமாரிக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, வலியால் துடிதுடித்துவந்தார்.

 

இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்குச் சென்ற அனன்யாகுமாரி, தன்னுடைய உடல்நிலையைக் கூறி தன்னைப் பரிசோதிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சம்மதிக்காததால், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவ அறிக்கையைக் கேட்டுள்ளார். அந்த அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை.

 

இதனால், அனன்யாகுமாரி தன்னுடைய நிலைமையை சக திருநங்கைகளிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். உடனடியாக திருநங்கைகள், நியாயம் கேட்டு மெடிக்கல் போர்டு விசாரிக்க வேண்டுமென்று கேரள முதல்வருக்கும், சுகாதாரத்துறைக்கும் புகார் அனுப்பினார்கள். மேலும், இதற்காக திருநங்கைகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

 

இந்நிலையில், உணவு எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் அவதிபட்டுவந்த அனன்யாகுமாரி, கொச்சியில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

திருநங்கை அனன்யாகுமாரி தற்கொலை மரணம் குறித்து விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையும் மருத்துவக் குழு ஒன்றும் விசாரணையில் இறங்கியுள்ளன.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

The girl who made Rahul cry, laugh and express her feelings without words at the same time

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி  இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் தொடர்ந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்நிலையில் ஒற்றுமை பயணத்தில் 20ம் நாளான இன்று தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் இளைஞர்கள் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். 

 

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற சிறுமி ராகுல் காந்தியை பார்த்த சந்தோசத்தில் அவரை கட்டிக்கொண்டு அழுதது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது.

 

அந்த சிறுமி ராகுல் காந்தியின் அருகே சென்றதும் சந்தோசத்தில் குதித்து, சிரித்து, அழுது என அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே நேரத்தில் செய்த அந்த காட்சியை கண்டோர் அனைவரும் தங்களை மறந்து ரசித்தனர்.

 

ஒருவரை பார்த்து சந்தோசத்தில் அழுவது சிரிப்பது என்பது இதுவரை சினிமா நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அடிக்கடி நடக்கும். ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு இத்தகைய அனுபவம் நடப்பது அரிது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 'Ban RSS too'-Kerala MP comments!

 

பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

 

இந்த தடை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா எம்.பி ஒருவர் பாப்புலர் ஃபிரண்ட்  ஆப் இந்தியாவை தடை செய்ததுபோல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். கேரள எம்பி கொடிக்குனில் சுரேஷ்,  ''பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியாவை மட்டும் தடை செய்தால் போதாது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்து மதவாதத்தை பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியாவும் ஒன்றுதான்'' என தெரிவித்துள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

500 note bundles were found while bathing in the river!

 

இப்படி ஒரு சம்பவம் நிகழும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் பெயர் தெரியாத அந்த நபர். ஆம் கேரளாவில் ஆற்றிங்கல் பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இரண்டு பெரிய தெர்மோகோல் பெட்டிகள் ஆற்றில் மிதந்து வருவதை பார்த்துள்ளார். எதேச்சையாக அதனை பிரித்து பார்த்த அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. உள்ளே 500 ரூபாய் நோட்டுகள் கட்டு காட்டாக இருந்தது. இதனை கண்ட அந்த நபர் அதனைப் பார்த்து திகைத்து நின்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. அந்த 500 ரூபாய் நோட்டுகளை கூர்ந்து கவனித்த போதுதான் தெரிய வந்தது அவை சினிமா ஷூட்டிங் பயன்பாட்டிற்காக அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் என்று.

 

அந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் 'Only For Shooting Purpose' என எழுதியிருந்ததை கண்டு மீண்டும் அதிர்ந்தார். 500 ரூபாய் நோட்டுகள் நீரில் அடித்துவந்து தன்னிடம் சேர்ந்தது என்பது எப்படி அவர் எதிர்பார்க்காத ஒன்றோ அதேபோல் அவை போலி என்பதும் அவர் எதிர்பார்க்காத ஒன்றாகவே ஏமாற்றத்தில் முடிந்தது. இது குறித்து ஆற்றிங்கல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

அண்மையில் அதே கேரளாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் லாட்டரி அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Intensive vehicle check on Tamilnadu-Kerala border!

 

கேரளா மற்றும் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரு மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை அடுத்து, கேரளாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

 

இந்த நிலையில், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.     

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

Pity of the lucky auto driver!


கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்டக்கார ஆட்டோ ஓட்டுநர் தற்போது நிம்மதி இழந்து தவிப்பதாக தெரிவித்துள்ளார். 

 

திருவனந்தபுரத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் அணுப் கடன் தொல்லையைத் தீர்க்க மலேசியா நாட்டுக்கு சமையல் வேலைக்கு செல்ல தயாரானார். இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, பம்பர் லாட்டரியை வாங்கியவருக்கு அடித்தது லக்கி ப்ரைஸ் என்பது போல, 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இதையடுத்து, அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. 

 

வீட்டைக் கட்டி முடித்து விடுவேன், புதிதாக தொழில் தொடங்குவேன், இருக்கும் கடன்களை அடைத்து விடுவேன், உறவினர்களுக்கு உதவுவேன் என்றெல்லாம் ஊடகங்களிடம் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் அவரது உற்சாகம் கரைந்து, அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. காரணம் அவருக்கு பரிசாக விழுந்த பணத்தைக் கடனாகக் கேட்டும், மருத்துவச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்குவது என ஒவ்வொரு காரணத்தைக் கூறியபடி, அவரது வீட்டின் முன்பு குவிந்தது தான். இதனால் அந்த நபர் தற்போது வீட்டிலேயே தங்குவதில்லை. 

 

இதில், வேடிக்கை என்னவெனில் திரைப்படம் தயாரிப்பதற்கு கூட அவரிடமே உதவிக் கேட்டு சிலர் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். இந்த தொந்தரவுகளால் மன நிம்மதியை இழந்திருப்பதாகக் கூறும் அணுப், தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் நள்ளிரவு சமயத்தில் தான் வீட்டிற்கு வருகிறார்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !