Skip to main content

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்!

24x7_seithigal
24x7_seithigal

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கணவனே மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் உ.பி-யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி ஊர்மிளா. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஊர்மிளா தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்து விடுமோ என்று சந்தேகம் அடைந்த அவரின் கணவர், அவரிடம் சச்சரவில் ஈடுபட்டுள்ளார். 



ஒரு கட்டத்தில் இந்த சண்டை உச்சகட்டம் அடைந்த நிலையில், குமார் தன்னுடைய மனைவி ஊர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவவத்தை பார்த்த அவரின் மூத்த மகள் நடந்த சம்பவத்தை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் புகார் தெரிவிக்கவே, குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

g

 

கன்னியாகுமாி மாவட்டம் முட்டம் அருகே உள்ளது கடியபட்டணம் மீனவ கிராமம். அங்குள்ள பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜான் ரிச்சாா்ட் (40) சௌதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சகாய சில்ஜா (32) இந்த தம்பதிகளுக்கு ஜோகன் ரிஷி (4) மற்றும் 4 மாதத்தில் ஒரு கை குழந்தையும் உள்ளது.  இந்த நிலையில் நேற்று (21-ம் தேதி) மதியம் 11.30 மணியளவில் குழந்தை ஜோகன் ரிஷி வீட்டின் அருகில் தனியாக விளையாடி கொண்டிருந்தான். இதை வீட்டில் வேலை செய்து கொண்டியிருந்த தாய் சகாய சில்ஜா அடிக்கடி கவனித்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் கைக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக வீட்டுக்குள்ளே இருந்திருக்கிறாள் சகாய சில்ஜா. பினனா் கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்த சகாய சில்ஜா விளையாடிக் கொண்டிருந்த மகனை காணாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாள். 

 

பின்னா் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தையை காணவில்லை. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும் கடற்கரையையொட்டி வீடு இருப்பதால் கடலுக்குள் குழந்தை தவறி விழுந்திருக்குமோ என்ற எண்ணத்தில் அந்த பகுதியில் உள்ள மீனவா்கள் கடற்கரைக்கு சென்று தேடினாா்கள். ஆனால் அங்கு குழந்தை செல்வதற்கான வாய்ப்பு இல்லையென்று உறுதி படுத்தினாா்கள். இதையொட்டி குழந்தை பற்றிய தகவலை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டனா். மேலும் மணவாளக்குறிச்சி போலீசிலும் புகாா் கொடுத்தனா்.

 

இந்த நிலையில் போலீசாா் குழந்தை ஜோகன் ரிஷி கழுத்தில் அணிந்திருந்த ஓரு பவுன் செயின் மற்றும் கையில் போட்டிருந்த அரை பவுன் பிரேஸ்லெட் நகைக்காக யாராவது கடத்தியிருப்பாா்களா? என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினாா்கள். அப்போது அவா்களுக்கு கிடைத்த பல்வேறு தகவலின் அடிப்படையில் அதே தெருவில் வசிக்கும் பாத்திமா (50) என்ற பெண்ணை பிடித்து விசாாித்ததில் நகைக்காக அவள் குழந்தையை கடத்தி கொலை செய்து இருப்பது தொிய வந்தது.


              
இது குறித்து போலீசாா் கூறும் போது... பாத்திமா அந்த பகுதியில் உள்ள ஏராளமானவா்களிடம் கடன் வாங்கியிருப்பதும் மேலும் வாங்கிய கடனை யாருக்கும் திருப்பி கொடுக்கும் பழக்கம் இல்லாதவள். இந்த நிலையில் அந்த பகுதியை சோ்ந்த பெண் ஒருவருக்கு 40 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். அந்த பெண் தினமும் அவளிடம் சண்டை போட்டு பணம் கேட்டு வந்ததால் கடைசியாக இந்த மாதம் 25-ம் தேதிக்குள் தருவதாக கூறியுள்ளாா்.

 

இந்த நிலையில் தான் அந்த பெண்ணுக்கு பணம் கொடுப்பதற்காக விளையாடி கொண்டிருந்த ஜோகன் ரிஷியை அன்பாக பேசி வீட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கையில் கிடந்த பிரேஸ்லெட்டை பறித்து விட்டு அந்த குழந்தையின் வாயில் துணியை சுத்தி வைத்து கை கால்களை கட்டி வீட்டுக்குள் இருந்த பீரோவுக்குள் வைத்து விட்டாள். சுமாா் அரை மணி நேரத்தில் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே இறந்து விட்டது.

 

பின்னா் இரவு குழந்தையை கடலில் வீசுவதற்காக திட்டமிட்டிருந்தாள். இதற்கிடையில் குழந்தையிடம் இருந்து கழற்றிய நகையை மணவாளக்குறிச்சியில் தனியாா் நகை அடகு கடையில் வைத்து 55 ஆயிரம் ருபாய் வாங்கி விட்டு அதில் 40 ஆயிரத்தை கடன் கொடுக்க வேண்டிய பெண்ணிடம் கொடுத்து இருக்கிறாள். இது அந்த பெண்ணுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு இரவு குழந்தையின் உடலை கடலில் வீச முயன்று இருக்கிறாள் அப்போது அங்கு ஆட்கள் இருந்ததால் முடிய வில்லை. பின்னா் அவளின் வீட்டில் புதைப்பதற்காக குழி தோண்டியிருக்கிறாள்.
           

இந்த நிலையில் தான் அவள் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்த விசயம் வெளியே வர ஊா் மக்களும் அவள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவளின் வீட்டுக்குள் சோதனை செய்ததில் பீரோவுக்குள் குழந்தையை கொலை செய்து வைத்தியிருப்பது தொியவந்தது என்றனா் போலீசாா். இதைத் தொடா்ந்து ஊா் மக்கள் ஒன்றாக அவளின் வீட்டை அடித்து உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தினாா்கள். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியதையடுத்து போலீசாரும் குவிக்கப்பட்டனா். இதை தொடா்ந்து பாத்திமாவையும் போலீசாா் கைது செய்தனா்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

The grandson who misbehaved in the rage

 

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது வட மாமந்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஷேக் மதார் என்பவரது மனைவி 75 வயது அலீமா பீ. இவர் பாத்ரூமில் குளிப்பதற்குச் சென்றபோது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தற்செயலாக அவரது வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர்கள் அலீமா பீ. ரத்தக் காயத்துடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தங்க வளையல், செயின், மோதிரம் ஆகியவையும் களவாடப்பட்டிருந்தன.

 

இதையடுத்து அலீமா பீ. மகன் அலிப்சா மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலீமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் விசாரணையில் அலீமா பீ. கொலை செய்யப்பட்டது குறித்து அவரது பேரன் சல்மான் செய்யது என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஊரிலிருந்து தப்பிச் செல்ல மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சல்மானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது பாட்டியிடம் குடிப்பதற்காக அடிக்கடி பணம் வாங்கிச் செல்வதுண்டு.

 

அப்படி சம்பவத்தன்று மது குடிக்கப் பணம் கேட்டபோது அவர் தர மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமுற்ற நான் அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து பாட்டியின் தலையில் போட்டு கொலை செய்தேன். அதன் பிறகு அவர் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் மோதிரம் ஆகியவற்றைக் கழட்டிக்கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது நீங்கள் பிடித்துவிட்டீர்கள்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சல்மானுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீசார் இருவரையும் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 45 கிராம் உருக்கிய தங்க கட்டிகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மது குடிக்கப் பணம் தர மறுத்த தனது பாட்டியைக் கல்லால் அடித்து பேரன் கொலை செய்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Revenge for the former councilor incident

 

புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (53) என்பவர் கோரிமேடு அருகே தமிழ்நாடு பகுதியான திருநகரில் வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றிவந்தார். நேற்று (14.10.2021) ஆயுத பூஜையை ஒட்டி இரவு 7 மணி அளவில் வாட்டர் டேங்க்கிற்கு பூஜை செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிவண்ணனை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

அதன்பின் அக்கும்பல் தப்பித்துச் சென்றது. தகவலறிந்த ஆரோவில் போலீசார் விரைந்து வந்து மணிவண்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறை விசாரணை நடத்தியதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், காமராஜர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலருமான மாந்தோப்பு சுந்தர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்கள் வினோத், சுந்தர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதனால் இருவரையும் பழிக்குப்பழியாக கொலை செய்ய எதிரிகள் நோட்டமிட்டுவந்தனர்.

 

இதை அறிந்த இருவரும் தலைமறைவாகினர். கடந்த 30ஆம் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவுநாளில் அவரது ஆட்கள் மணிவண்ணனின் மகன்கள் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இந்த நிலையில் சுந்தர், வினோத் இருவரும் ஊருக்குள் நுழைய போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்ததால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. அதையடுத்து அவர்களின் தந்தை மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. மணிவண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்களை புதுச்சேரி - தமிழ்நாடு போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும், கொலையாளிகளைப் பிடிப்பது சம்பந்தமாக இரு மாநில போலீசாரும் வியூகம் வகுத்துவருகின்றனர். இந்தப் பழிக்குப் பழி கொலை சம்பவத்தால் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

ads

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

hgj

 

கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். 27 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது ருத்ராவிடம் 784 கிராம் தங்க நகைகள், கார் உள்ளிட்டவற்றை அவர் வரதட்சணையாக வாங்கியுள்ளார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், பாம்பை வைத்து மனைவியைக் கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தார். இதற்காக யூடியூப்பில் அதிக விஷம் கொண்ட பாம்பு எது என்று பல நாட்கள் பார்த்துள்ளார். அதில் ஒரு பாம்பை இறுதி செய்த அவர், பாம்பு பிடிக்கும் நபரிடம் தனக்கு இதுபோல் ஒரு பாம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். பாம்பு பிடிப்பவரும் அதே மாதிரியான பாம்பைப் பிடித்து அவரிடம் கொடுத்துள்ளார். அதை மனைவி வீட்டில் இருக்கும் போது அவருக்கு அருகில் தூக்கிப்போட்டுள்ளார். பாம்பு பின்புறமாக வந்து அவரின் காலை கடித்ததுள்ளது. 

 

இதில் நிலைகுலைந்த அவர் கத்தியுள்ளார். எப்படியும் மனைவி இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், அவரை மருத்துவமனைக்கு சூரஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 40 நாட்கள் இருந்த அவரின் மனைவி பிழைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சூரஜ், மீண்டும் ஒரு பாம்பை வாங்கி, மாமனார் வீட்டிற்குப் போயிருந்த மனைவியைக் கொல்ல, அங்கேயே சென்று பாம்பை அவர் தூங்கும் போது அவர் அருகில் வீசியுள்ளார். பாம்பு கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து மகளைப் பாம்பு கடித்ததால் சந்தேகம் அடைந்த ருத்ராவின் பெற்றோர் போலிசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை விசாரித்த அவர்கள், சூரஜ் தான் இந்த வேலைக்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை, தற்போது நீதிமன்றம் குற்றவாளி என்றும், இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

3 arrested in Dindigul Nirmala Devi case

 

கடந்த 22-ம் தேதி மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி கொலை வழக்கில்  மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மூன்று பேர் இருப்பதாகத் திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசனுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி எஸ்.பி. தனிப்படையினர் அங்குப் பதுங்கி இருந்த 3 நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் நிர்மலா தேவி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.

 

அதனடிப்படையில்  திண்டுக்கல் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார், இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளராக இருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியைச்  சேர்ந்த நடராஜன் மற்றும் செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அதன்பின் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதின் பேரில் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் நிர்மலா தேவி கொலை வழக்கு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தும் இருக்கிறார்கள்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !