Skip to main content

அயோத்தியில் 151 மீட்டரில் ராமருக்கு சிலை! 

24x7_seithigal
24x7_seithigal
ramar


குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயர்ந்த சிலை ஒன்று நிறுவப்பட்டு, கடந்த 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை போன்றே மற்றொரு பிரமாண்ட சிலை மராத்திய அரசர் சிவாகிக்கு அரபிக்கடலில் நிறுவப்பட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைக்க முடிவு செய்துள்ளார். 
 

இந்நிலையில், இதுகுறித்து அயோத்தி மேயர் ரிஷகேஷ் உபாத்யா கூறுகையில், “அயோத்தியில் சரயு நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிடப்படும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

PRIYANKA GANDHI VADRA

 

அயோத்தி நில வழக்கில் இராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், இராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.இந்த அறக்கட்டளை கோவிலுக்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட சுமார் 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி அயோத்தியில் பலர் இராமர் கோவில் கட்டப்படும் இடத்தை சுற்றி இடம்வாங்க முயற்சித்து வருகின்றனர். கோவிலுக்கு அருகே நிலம் வாங்கினால், அந்த நிலங்களை கையகப்படுத்தும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் பெரிய விலைக்கு விற்கலாம் என்ற திட்டத்தோடு நிலம் வாங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில்,இராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்த பிறகு, எம்.எல்.ஏ.க்கள், மேயர், அயோத்தியா டிவிஷனல் கமிஷனர், வருவாய் அதிகாரிகள், டிஐஜி மற்றும் இவர்களது உறவினர்கள் என சுமார் 15 பேர், கோவிலைச் சுற்றி நிலம் வாங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று ஆதாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. இதனையொட்டி இந்த நிலங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த நில முறைகேடு குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது: 2017-ம் ஆண்டு குறிப்பிட்ட நபருக்கு விற்கப்பட்ட நிலத்தை அந்த நபர் இரண்டாகப் பிரித்து விற்றுள்ளார். அந்த நபர் நிலத்தின்  முதல் பகுதியை 8 கோடி ரூபாய்க்கு நேரடியாக ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்றுள்ளார். இரண்டாம் பகுதியை (ராம் மந்திர் அறக்கட்டளைக்கு முதல் பகுதி விற்கப்பட்ட) 19 நிமிடங்களுக்குப் பிறகு ரவி மோகன் திவாரிக்கு என்பவருக்கு ரூ. 2 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இந்த ரவிமோகன் திவாரி அந்த ரூ. 2 கோடி நிலத்தை ₹ 18.5 கோடிக்கு ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்கிறார். அடிப்படையில், ரூ.2 கோடிக்கு சற்று அதிகமான விலையுள்ள ஒரு நிலத்திற்கு அறக்கட்டளை 8 கோடி ரூபாயும், 18.5 கோடி ரூபாயும் அளிக்கிறது. இது ஊழல் இன்றி வேறு என்ன?

 

அந்த நிலம் பிரச்சனையில் இருக்கிறது. அந்த விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில், அந்த நிலத்தை விற்கமுடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தங்களில் சாட்சிகள் யார்? ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர் - ராமர் கோவில் கமிட்டியில் அறங்காவலராவார். மற்றொருவர் அயோத்தியின் மேயர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் ராம் மந்திர் அறக்கட்டளைக்கு ஏதாவது நன்கொடை அளித்துள்ளனர். வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் நடத்தப்பட்டது. இது பக்தியை பற்றிய விஷயம், அதை வைத்து விளையாடுகிறார்கள். தலித்துகளின் நிலங்களை வாங்க முடியாது என்ற நிலையில் அவை பறிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது. அது வெறும் கண்துடைப்பு. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

salman khurshid

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எழுதிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் சல்மான் குர்ஷித், இந்துத்துவாவை ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களோடு ஒப்பிட்டிருந்தார்.

 

இதற்குப் பாஜகவிடமிருந்தும், வலதுசாரிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்தொடர்ச்சியாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே இந்து - இந்துத்துவா குறித்து வார்த்தை போர் மூண்டது.

 

இந்தச் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டை சிலர் சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். இதுதொடர்பான படங்களையும், வீடியோக்களையும் சல்மான் குர்ஷித் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சல்மான் குர்ஷித் வீட்டின் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

p chidambaram

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (10.11.2021) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என கூறுவதற்கு நாம் யாரும் வெட்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

 

'சன்ரைஸ் ஓவர் அயோத்தியா - நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்' என்ற சல்மான் குர்ஷித்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ப. சிதம்பரம் பேசியதாவது, “அந்தக் கதை (அயோத்தி பிரச்சனை) 1992இல் தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் எதிர்பாராத முடிவுக்கு வந்தது.

 

இந்த தீர்ப்பிற்கான நீதித்துறை முகாந்திரங்கள் மிகவும் குறுகியது. ஆனால் நீண்டகாலம் கடந்ததால் அனைத்து தரப்பும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டன. இரு தரப்பும் அதை ஏற்றுக்கொண்டதால், அது சரியான தீர்ப்பாக மாறிவிட்டது. இது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட சரியான தீர்ப்பல்ல. உண்மை என்னவென்றால், டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது மோசமான தவறு. அது நமது அரசியலமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்திய சம்பவம். அது உச்ச நீதிமன்றத்தையும் மீறி, இரு சமூகங்களுக்கு இடையே இணைக்க முடியாதது போல தோன்றும் இடைவெளியை உருவாக்கியது. அது தவறு; மோசமான தவறு. அது எப்போதுமே மோசமான தவறுதான் என 1000 முறை சொல்லுவேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என்று சொல்ல நாம் வெட்கப்படவில்லை. அந்த முடிவு நம்மை எப்போதும் ஆட்டிப்படைக்கும்.” இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் இந்த விழாவில் பேசிய திக்விஜய் சிங், "அத்வானியின் ரத யாத்திரை சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவில்லை, பிளவுபடுத்தியது. அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் வெறுப்பின் விதையை தூவி, நாட்டில் மதவெறிக்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார். வீர் சாவர்க்கர், பசு மாதா என அழைக்கப்படுவதைக் கேள்வியெழுப்பினார். மாட்டுக்கறி சாப்பிட்டார். இந்து என்ற அடையாளத்தை நிலை நிலைநாட்ட இந்துத்துவா என்ற வார்த்தையைக் கொண்டுவந்தார். அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், 1858ஆம் ஆண்டு முதல் ராம ஜென்மபூமி சர்ச்சை இருந்துவந்தது. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை அதை ஒரு பிரச்சனையாக மாற்றவில்லை. ஆனால், 1984ஆம் ஆண்டில் இரண்டு சீட்டுகளுக்கு சுருக்கப்பட்ட பின்னர் அவர்கள் இதனை தேசிய பிரச்சனையாக்க முடிவு செய்தனர். ஏனென்றால் அடல் பிஹாரி வாஜ்பாயின் காந்திய சோசலிசம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர்கள் தீவிர மத அடிப்படைவாதத்தை எடுத்துக்கொண்டனர்" எனவும் கூறியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

ராமர் கோவில் அரசியல்! - சர்ச்சைகளின் நிலத்தில் வேர்விட்ட பா.ஜ.க! 

Profile picture for user george@nakkheeran.in
ஜார்ஜ்
Submitted by george@nakkheeran.in on 12 October 2021
ayodhya issue on 1992

 

சென்ற வருடம் (2020) கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோதும், ஆகஸ்ட் 05 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மிகப் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் “இந்துக்களின் பல வருடக் கனவு நிறைவேறியதாக” நெகிழ்ந்தனர். ஆனால், உண்மையில் 1528ல் பாபரால் கட்டப்பட்ட மீர் பாங்கி மசூதியின் (பாபர் மசூதி) பிரச்சனை இந்துக்களின் அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டது 1949 ல் பாபர் மசூதிக்குள் சில இந்து அமைப்புகளால் ராமர் சிலை நிறுவப்பட்டதற்கு பிறகுதான்.

 

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் பாபர் மசூதியை அகற்றிவிட்டு அதே இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1980 வரை உள்ளூர் அரசியலில் மட்டுமே சலனத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் பா.ஜ.க. நிறுவப்பட்ட பிறகு ராம ஜென்ம பூமி மீட்பு இயக்கமாக வலுப்பெற்றது. 1984 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராம்-ஜானகி யாத்திரை பல இயக்கங்களையும் மக்களையும் ராம ஜென்ம பூமி மீட்பில் இணைந்துகொள்ள ஊக்கப்படுத்தியது. அந்த யாத்திரையில் இடம்பெற்ற ராமர்-ஜானகி கூண்டிற்குள் அடைக்கப்பட்டது போன்ற தேர் அயோத்தியை அடைந்த போது இந்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டி பாபர் மசூதி இடிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தைப் பலப்படுத்தியது. கூடவே பா.ஜ.க.வும் பலம் பெற்றது. 

 

1990 ,செப்டம்பர் 25 அன்று, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலிலிருந்து அயோத்தி நோக்கி ரத யாத்திரை தொடங்கினார். ராமர் கோவிலை முன்வைத்து பா.ஜ.க. விற்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் இந்த முயற்சி பெருமளவு வெற்றிபெற்றது. ரத யாத்திரை பாட்னாவை அடைந்தபோது எல்.கே.அத்வானியின் உரையைக் கேட்கக் காந்தி மைதானத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கூடினர். அத்வானிக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு இருந்தபோதிலும் அப்போதைய பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அக்டோபர் 23 ஆம் தேதி அத்வானியைக் கைது செய்தார். யாத்திரையையும் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அக்டோபர் 30 ஆம் தேதி கர சேவகர்கள், இந்து அமைப்பினர் பலரும் அயோத்தியை முற்றுகையிட்டனர். அவர்களைத் தடுக்க நினைத்த முலயாம் சிங் அரசின் முயற்சிகள் தோல்வியடைவே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் முடிவில் 16 கரசேவகர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வுகள் பாபர் மசூதி இடிப்புக்கு அடித்தளமாக அமைந்தன.

 

1992 டிசம்பர் 6, பா.ஜ.க. எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்காக நாடு முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் கர சேவகர்கள் அங்கு குவிந்தனர். பேரணி விரைவில் கலவரமாக மாறியது. ஒரே மூச்சில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையைக் கலைத்தார். தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பட்ட கலவரங்களில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இன்றளவும் ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதியைப் பதற்றமான நாளாக மாற்றிய இந்த சம்பவத்தால் பா.ஜ.க. அடைந்த பலன்கள் ஏராளம்.

 

 

ayodhya issue on 1992

 

 

இத்தகைய கலவரம் நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே பாபர் மசூதி விவகாரத்தில் பா.ஜ.க.வின் அரசியல் குறித்து 30.7.1992 தேதியிட்ட இதழில் நக்கீரன் அம்பலப்படுத்தியது.

 

அயோத்தி:-

 

பாரதீய ஜனதா கட்சிக்கு அரசியல் தொய்வு ஏற்படும் போதெல்லாம் ராமர் கோவிலை துணைக்கு அழைத்து கோஷம் போடுவது வாடிக்கையாகி விட்டது. ‘‘பாபர் மசூதியை இடித்து அந்த இடத்திலேயே ராமர் கோவிலைக் கட்டுவோம்’’ என்று தேர்தல் அறிக்கையிலேயே அந்தக் கட்சி அறிவித்திருந்தது அரசியல் சட்டத்துக்குப் புறம்பான விஷயமே. ராமரின் செல்வாக்கில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாரதீயஜனதா இடையில் கொஞ்சநாட்கள் மௌனவிரதம் இருந்துவிட்டு தற்போது மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளது. ‘‘பாபர் மசூதியை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’’ என்று அலகாபாத் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தும் கடந்த ஜூலை ஒன்பது அன்றிலிருந்தே பாரதீய ஜனதா கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதிக்க ஆரம்பித்து விட்டது.

 

ஏறக்குறைய அறுபதாயிரம் ‘‘கர சேவா தொண்டர்கள் கட்டுமானப் பணியில்’’ ஈடுபட்டிருப்பதாக பா.ஜனதா பெருமையோடு அறிவித்துள்ளது. உத்திரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங்கை கேட்டாலோ அவர்கள் ‘‘சாதுக்கள் ரிஷிகள் நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்று கையை விரிக்கிறார். இதுவரை ‘‘ராமர் பாபர்’’ பிரச்சனைக்காக எழுபத்திமூன்று முறை கூடிப் பேசிய தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் எதையும் சாதித்து விட்டதாகத் தெரியவில்லை. 

 

இந்தப் பிரச்சினையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் நரசிம்மராவ் ‘ஏனோதானோ’வென்ற அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறார். இடதுசாரி கட்சிகள் தேசிய முன்னணியினர் உ.பி.அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி பலத்த குரல் எழுப்பியும் மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான ‘ரெஸ்பான்ஸ்’ ஆன பதிலும் இல்லை. பா.ஜனதா ஆட்சி நடத்தும் உ.பி.அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு நாடு முழுவதும் பரவலான குரல்கள் கிளம்பியுள்ள இந்த நிலையில் ராமர்-பாபர் மசூதி பிரச்னை குறித்து சில பிரபலங்களிடம் கருத்து கேட்டோம்.

 

சர்வ பள்ளி கோபால்: வரலாற்று ஆராய்ச்சியாளர். (முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன்.)

 

இந்தியா என்பது இந்திய நாடுதானே தவிர இந்து நாடு அல்ல. சீக்கியர்கள் முஸ்லிம்கள் போன்ற மதத்தினரும் இந்தியாவின் பிரஜைகளே. பா.ஜ.கவின் கருத்துப்படி ‘‘ஹிந்துஸ்தான்’’ ஆகி விட்டால் மற்ற மதத்தினர் இரண்டாம்தர பிரஜைகளாகி விடுவார்கள். 

 

கடவுள் வழிபாடும் மத ஈடுபாடும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். இதிலே அரசியலைக் கலப்பதோ அரசியலில் மதத்தைக் கலப்பதோ சுயநலம்தான். பாரதீய ஜனதாவின் ஓட்டு வாங்கும் குறுகிய எண்ணம்தான் ராமர் கோவில் விவகாரம். ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்தை விஸ்வரூபம் ஆக்குவதை நாம் அனுமதிக்கக் கூடாது. நான் ஒரு வரலாற்றாளன் என்கிற முறையில் இதை தெளிவாகச் சொல்கிறேன். ‘‘அயோத்தியில் ராமர் பிறந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது.’’ நாடு இவ்வளவு நாகரீகமாகி முன்னேறிய பிறகும் மதத்தைச் சொல்லி பிரிப்பது அநாகரீகமான விஷயம்.

 

பா.ஜனதாவும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் வேறு வேறு என்று சொல்வது ஒருவிதமான நாடகம். மத சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் தேசத்தில் இப்படி ஒரு கலவரம் நடப்பது கேவலமே. வரலாறு இதை மன்னிக்காது. இதனால் அரசியல் நீதி நாசம் அடைகிறது. பாரதீய ஜனதா தனது அரசியல் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைதான் ராமர் கோவில் கட்டுமானப் பணி. பிரதமர் நரசிம்மராவ் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இந்த விசயத்தில் இடதுசாரிக் கட்சிகளும் தேசிய முன்னணியும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதால் நரசிம்மராவ் ‘‘மைனாரிட்டி அரசு’’ என்று தன் ஆட்சியை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. எந்த நேரத்திலும் பாரதீய ஜனதா செயல்பாட்டை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் இது மனித குல வரலாற்றின் நாகரிகம் தொடர்பான விஷயம். 

 

 

ayodhya issue on 1992

 

 

என். ராம். (ஆசிரியர். ஃபிரண்ட்லைன்)

 

பாரதிய ஜனதா கிளப்பியுள்ள இந்த விவகாரம் சீரியஸான ஒரு பிரச்னை. ஆனால், மத்திய அரசு மிகவும் மெதுவாக அக்கறையின்றி செயல்படுகிறது. நரசிம்மராவ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டும் பா.ஜ.க.அதை மீறுகிறது என்றால் நாம் எப்படி இதை அனுமதிக்க முடியும்? உத்திரப்பிரதேச அரசு இந்த விஷயத்தில் நாடகம் ஆடுகிறது. 

 

ராமர் என்பதே ஒரு கட்டுக்கதை. ராமர் பெயரைச் சொல்லி மசூதியை இடிப்பது தவறு. அவ்வாறு செய்யக் கூடாது. மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய அரசாணையை இதற்கு முன்பு காங்கிரஸ் பல முறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இப்போது நியாயமான முறையில் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை. அப்போதுதான் பல உயிர்கள் பலி ஆவதை தடுத்து நிறுத்த முடியும். 

 

வி.விஜயராகவலு. மாநிலத் தலைவர் - பாரதீய ஜனதா. 

 

சோமனாதபுரம் கோவிலின் மீது கஜினி முகமது படையெடுத்து தரைமட்டமாக இடித்துத் தள்ளியது வரலாறு. சுதந்திரம் அடைந்த பிறகு அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நேருவை எதிர்த்து சோமநாதபுரம் கோவிலுக்கான கட்டுமானப் பணிகளைச் செய்தார். அது போலத்தான் ராமர் கோவிலும்.  ராமர்கோவில் இருந்தது என்பது இந்துமத மக்களின் நம்பிக்கை. அதனால் மசூதியை அகற்றிவிட்டு கோவில் கட்டியே தீரவேண்டும். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதற்கான வரலாற்று சான்றுகளும் எங்களிடம் உள்ளன. இந்து மதத்தை அழிப்பதற்காக இந்து மத புனித ஸ்தலங்களை உருத்தெரியாமல் சிதைப்பதுதான் மொகலாய மன்னர்களின் வழக்கம். அப்படித்தான் பாபரும் செய்தார். 

 

நாங்கள் சட்டத்தை எந்த இடத்திலும் மீறவில்லை. எதிர்க் கட்சிகள்தான் அனாவசியமாகப் புலம்புகின்றன.. மத்திய அரசிடம் நேரில் பேசியாவது ராமர் கோவிலைக் கட்டி முடிப்போம். 

 

24x7_seithigal
24x7_seithigal

 

up seer

 

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜ். நேற்று (28.09.2021) அயோத்தியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் சரயு நதியில் ஜல சமாதி அடையப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

மேலும் அவர், இந்தியாவில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜின் இந்தக் கோரிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜ் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !