Skip to main content

வெகுவாகக் குறைந்த கரோனா தொற்று... மகிழ்ச்சியில் ஆந்திர மக்கள்!

24x7_seithigal
24x7_seithigal

 

;lk


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில், தற்போது கரோனா வெகுவாகக் குறைந்து வருகின்றது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 1,221 பேருக்கு, கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 8,57,037 பேர் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,920 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 21 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 8,34,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு படிப்படியாகக் குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Corona for Congress General Secretary Priyanka!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் குணமடைந்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

 

இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருக்கும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தனது ராஜஸ்தான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

O. Panneerselvam's health is stable, the hospital administration reported!

 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து, நேற்று (15/07/2022) காலையில் அவர் கரோனா பரிசோதனை செய்தார். 

 

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓ.பன்னீர்செல்வம் நேற்று லேசான கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். அவரது  உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

PMK. Founder Ramadoss is confirmed to be infected with Corona!

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

 

கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

'Fine of Rs 500 for not wearing face mask'- Chennai Corporation Notice!

 

சென்னையில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தடுப்பு பணிக்க, கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. 

 

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிகவளாகம், திரையரங்கம், மார்க்கெட் போன்ற இடங்களில் முகக்கவசங்கள் அணியாவிடில் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். அங்காடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !